full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நிருபரை கிண்டலடித்த சரத் குமார்!!

அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் இப்படி பல பிரபலங்களிடம் செய்தி நிருபர்கள் சில சம்யங்களில் சம்பந்தமே இல்லாமல் கேட்கும் கேள்விகளால் அவர்கள் எரிச்சலைடவது உண்டு.

கிரிக்கெட் வீரர் தோணி, ஒரு முறை குதர்க்கமாக கேள்வி கேட்ட நிருபரை மேடையேற்றி அவர் கேட்ட கேள்விக்கு அவரிடமே பதில் வரவழைத்தார். இதை விட ஒரு படி மேலே போய் “கேப்டன்” விஜயகாந்த் ஒரு நிருபரைப் பார்த்து “தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க” என்று கடுப்பான சம்பவமும் நடந்திருக்கிறது.

அதுபோல தான் சமீபத்தில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரும் ஒரு நிருபரை கடிந்து கொண்டிருக்கிறார்.

காவிரையை மீட்க வேண்டி தமிழகம் தழுவிய விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் நடிகர் சரத்குமார். அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நிருபர் சம்பந்தமே இல்லாமல், “உங்கள் தாடியின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு “முதலமைச்சர் இல்ல, பிரதமாரா வரணும்’னு வச்சிருக்கேன்” என்று கடுப்புடன் பதிலளித்தார்.

எப்போ தான் இந்த நிருபர்கள் இப்படி சல்லித்தனாமா கேள்வி கேட்பதை நிறுத்துவார்களோ?? பாவம், பிரபலங்கள்!!