full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

5 நாட்கள் பரோலில் சசிகலா சென்னை வருகை

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் சென்று பார்க்க 15 நாட்கள் அவசர “பரோல்” வழங்குமாறும் கோரி இருந்தார்.

இந்த நிலையில் சசிகலாவின் பரோல் மனுவை பரிசீலனை செய்த பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகர், “சசிகலாவின் “பரோல்” மனுவில் விவரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை. விவரங்களில் சில குறைபாடுகள் இருக்கின்றன. எனவே தேவையான பிரமாண பத்திரங்கள் மற்றும் முழு விவரங்களுடன் மீண்டும் புதிதாக “பரோல்” மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி, மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பரோலுக்கு விண்ணப்பித்த சசிகலாவிற்கு தற்போது 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்கு சென்னை வரவிருப்பதாகவும், இளவரசியின் மகள் வீட்டில் தங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.