ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் தன்னுடைய தமிழ் உணர்வை தெரிவிக்கும் வகையிலும், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் மிக அழுத்தமாக பேசியிருந்தார். அன்றே நடிகர் சத்யராஜின் உருவபொம்மையை கர்நாடக மாநிலம் முழுவதும் கர்நாடக அமைப்புகளால் எரிக்கப்பட்டது.
அதன் பின்னர் சமீபத்தில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியீடு நெருங்கும் நேரத்தில் வாட்டள் நாகராஜ் என்பவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர் பேசிய பேச்சு கன்னட மக்களை புண்படுத்தும் வகையில் உள்ளது, ஆகையால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள பாகுபலி 2 திரைப்படத்தை கர்நாடகாவில் எங்கும் திரையிடவிடமாட்டோம் என்று எதிர்ப்பு கிளப்பி இருந்த நிலையில் நடிகர் சத்யராஜ்காக, இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி மன்னிப்பு கோரி ஒரு வீடியோவை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும், அவ்வாறு நடைபெறவில்லை என்றால் நிச்சயம் படம் வெளியாகாது என்று கூறியிருந்தனர்.
இதற்காக இன்றைக்கு நடிகர் சத்யராஜ் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தான் பேசிய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…