நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலுங்கானா) பகுதியில் நடைபெற்று வருகிறது, அங்கு நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. RRR படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்து, தேசத்தையே வியப்பில் ஆழ்த்திய பிரேம் ரக்ஷித் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். அதிகமான வெயில் கொளுத்தும் சூழல் இருந்தபோதிலும், இப்பாடலுக்காக படக்குழு கடினமாக உழைத்துள்ளது. இப்பாடல் படப்பிடிப்பில் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க, பிரம்மாண்டமாக இந்தப் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘தசரா’ படத்தின் ‘ஸ்பார்க் ஆஃப் தசரா’ காட்சித்துணுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது மற்றும் அதில் நானியின் மாஸ் கெட்அப் மற்றும் மூர்க்கமான அவதாரம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.