
மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விவேக் அவர்களின் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார்.
