“தென்மேற்குப் பருவக்காற்று”, “நீர்ப்பறவை”, “தர்மதுரை” ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. அழுத்தமான கதையுடனும், எளிமையான திரைக்கதையுடனும் உருத்தாத சினிமாக்களின் சொந்தக்காரரான இவர், தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் “கண்ணே கலைமானே” படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
தமிழின் மீதும், தமிழ்ச் சமூகத்தின் மீதும் பற்று கொண்டவராக இருக்கும் சீனு ராமசாமி, காவிரி விவகாரம் குறித்து பதிந்துள்ள ட்வீட் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. அந்த ட்வீட்டில்,
“வடகொரியா தென்கொரியா இரு நாடுகளே இணைந்துவிட்டது,இரு மாநிலத்தின் மக்கள் நட்போடு இருப்பதை உணராமல் காவேரி மேலாண்மையை அரசியல் லாபம் கிட்டி விடும் என்கிற மூடநம்பிக்கையில் தள்ளிப்போடுவது நியாயமா? இணைவு தான் லாபம். பிரிவு இருவருக்கும் வீழ்ச்சியன்றோ?” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் நலனை மறந்துவிட்டு, அரசியல் லாப நோக்கத்தோடு மத்திய அரசு ஆடும் சடுகுடு ஆட்டம் எப்போது தீருமோ? இயக்குநரைப் போலவே தமிழக மக்களும் நியாயம் கேட்டு காத்திருக்கிறார்கள்!!