full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கவிஞருக்கு கவிதை நடையில் வாழ்த்து சொன்ன சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். இவர் இன்று தன்னுடைய 62வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதில் இயக்குனர் சீனு ராமசாமி கவிதை நடையில் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

இன்று
நாட்டுக்கோழிகளும்
வெள்ளாட்டு கிடாய்களும்
அலறின..

ஜல்லிக்கட்டுகாளைகள்
திமிழ்களை நிமிர்த்தி
தழுவ அழைத்தன

கத்தரிப்பூ பூ பூத்திருந்தது நின் வருகையை
கெங்குவார் பட்டியில்…
கொண்டாட….

காமுக்காப்பட்டியின் தங்கை
வைகை வெள்ளம்
வந்து சேர்ந்த பள்ளம்
ஆண்டிப்பட்டி கணவா காத்தில் விஜய் சேதுபதி மீன் பிடித்து விளையாடிய நதியூராம்
மெட்டூரில் பிறந்தது வைரமுத்து என்ற கருப்பு காப்பியம்
தென்கிழக்கு சீமையின்
தமிழ் கோப்பியம்

ஏழு தேசிய விருதில்
இரண்டை எனக்குத்தந்த
வகுடெடுத்த வடுகப்பட்டி
கண்ணன்
கலைஞர் இவருக்கு
அண்ணன்

தமிழ் சினிமா பாட்டு உலகில் அதிக பட்ச சம்பளம் பெரும்
பாடலாசியர்
மதன் கார்க்கி வரை
களத்தில் நிற்கும்
நல்லாசிரியர்

அன்பு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கவிஞரே…

என்று இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்து கூறியுள்ளார்.