“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியை வைத்து பாலாஜி தரனீதரன் இயக்கும் படம் “சீதக்காதி”.
விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தில், வயது முதிர்ந்த கேரக்டரில் இருப்பது மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றது.
விஜய் சேதுபதியின் இந்த தோற்றம் குறித்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேசியுள்ளார்.
அந்த கேரக்டர் குறித்து அவர் கூறியதாவது,
“இந்த படம் ஒரு மேடை நாடக சூழலில் ஆரம்பிக்கிறது. விஜய் சேதுபதி இதில் வயதான பெரியவராக நடித்திருக்கிறார். அவ்வப்போது சின்னச் சின்ன சஸ்பென்ஸும் ட்விஸ்ட்டும் இருக்கும்.
விஜய் சேதுபதியின் பெரியவர் தோற்றத்தின் மேக் அப்பிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றோம். அங்கே ஆஸ்கர் வின்னர் கெவின் ஹேனி தான் இந்த கெட்டப்பிற்கு ஒரு அமைப்பு கொடுத்தார்.
அங்கே தான் விக், ஸ்கின் மோல்டு எல்லாத்துக்கும் அளவு கொடுத்து விட்டு வந்தோம். அதை எங்களோட ஷூட்டிங் ஸ்பாட்ல வைத்து விஜய் சேதுபதிக்கு மேக் அப் போட்டது
அலெக்ஸ் நோபல்னு ஒரு ஹாலிவுட் நபர் தான். இந்த கதைக்கு அவங்களோட உழைப்பு ரொம்ப பெரியது. இந்த மேக் அப்பை போடுவதற்கு 4 மணி நேரம் ஆகும். அதே போல,
அந்த மேக் அப்பை எடுக்குறதுக்கு ஒரு மணி நேரமாகும். அதனால், ஸ்பாட்டுக்கு அவர்தான் முதல்ல வரணும், கடைசியா போகணுமுங்கிற மாதிரியான சூழல் இருந்தது” என்றார்.