நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசி லீக்ஸ் போன்று தெலுங்கு பட உலகை புதிதாக கிளம்பி உள்ள ஸ்ரீலீக்ஸ் ஆட்டிப்படைக்கிறது. தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி உள்ளார்.
முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் ஸ்ரீலீக்ஸில் வெளியானது. தொடர்ந்து பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலுவும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார். இவர் நயன்தாரா நடித்து தமிழில் வெளியான ‘நீ எங்கே என் அன்பே” என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்தவர். சாய்பல்லவி நடித்த ‘பிடா’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி உள்ளார்.
சேகர் கம்முலு மீது மறைமுகமாக குற்றம் சாட்டி பேஸ்புக்கில், “அந்த இயக்குனர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர். அவருக்கு இரக்கம் இல்லை. ‘கொம்முலு வச்சின சேகருடு என்பதில் இருந்து அவரது பெயரை கண்டுபிடிக்கலாம். வீடியோ அழைப்பிலும் வருவார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதில் வல்லவர். இளம் நடிகர்களிடம் பணம் வாங்கி நடிக்க வாய்ப்பு அளிக்கிறார்”. என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
டைரக்டர் சேகர் கம்முலுவைத்தான் நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார் என்று தெலுங்கு பட உலகினர் பேசினார்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து டைரக்டர் சேகர் கம்முலு தனது டுவிட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு சம உரிமை மற்றும் அவர்கள் மேம்பாட்டுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் என்னை அறிந்தவர்களுக்கும் இது தெரியும். என்னை குற்றம் சாட்டியவர்களை சும்மா விடுவதாக இல்லை. என்னை பற்றி பதிவிட்ட கருத்தை நீக்கி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.”என்று மறுத்துள்ளார்.
இவர்கள் மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.