full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

குட்டி’ தளபதிகளுடன் செம ‘ஆட்டம்’ போட்ட மாஸ்டர்… வைரலாகும் வீடியோ!

தமிழின் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நேற்று நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச் விழாவில் ‘தளபதி’ விஜய் கெட்டப் போட்ட தனது நடன பள்ளி சிறுவர்களுடன் அசத்தலான நடன நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றம் செய்தார்.

 

 

அதில் போக்கிரி, கில்லி, பைரவா, ஜில்லா, தலைவா, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் வரும் விஜய் கெட்டப்புகளில் உடையணிந்து வந்த சிறுவர்கள் அந்தந்த பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தனது குட்டீஸ்களுடன் சாண்டி மாஸ்டர் கலக்கல் டான்ஸ் ஆடினார். இந்த நிலையில் தற்போதும் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு, “குட்டி  தளபதிகளுடன் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடியது மிகவும் சந்தோஷம்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.