ஹாஸ்டல் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

cinema news
0
(0)

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில்,

இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது…

எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு  தாருங்கள் நன்றி.

நடிகர் கிரிஷ் குமார் கூறியதாவது…

வாய்ப்பு தந்த சுமந்த் அவர்களுக்கு நன்றி. 2021 ல் இந்தப் படம் எடுத்தோம். கொரோனாவுக்கு பிறகு பல படங்கள் ஓடிடி செல்லும் நேரத்தில், இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு வரும் ரவி சாருக்கு நன்றி. படப்பிடிப்பில் ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா இருவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் போபோ சசி கூறியதாவது…

என்னை நம்பி வாய்ப்பு தந்த Trident Arts நிறுவனத்திற்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். எல்லோரும் சின்ன பட்ஜெட்டில் அரபிக்குத்து மாதிரி பாடல் வேண்டும் என்பார்கள் ஆனால் சுமந்த் அந்த மாதிரி எதுவும் கேட்காமல், என்னை இயல்பாக வைத்து கொண்டார். நான் பாடல் மாற்றலாம் என்றாலும் அவர் மறுத்து விடுவார். படத்திற்காக நிறைய உழைத்துள்ளார்கள். இதில் நடித்த அசோக், பிரியா இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் kpy யோகி கூறியதாவது…

எனக்கு முதல் மேடை இது. இப்படி ஒரு சினிமா போஸ்டரில் என் பெயரையும் முகத்தையும் பார்க்க பெருமையாக உள்ளது.. பெரும்பாலும் தொலைக்காட்சி நடிகர்களுக்கு திரையில் வாய்ப்பு தர மாட்டார்கள் ஆனால் சுமந்த் சார் நிறைய ஊக்கம் தந்து, இப்படத்தில் நல்ல கதாபாத்திரம், நீங்கள் நடியுங்கள் என்றார் அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்கும் போது ஆதரவளித்த அசோக் மற்றும் பிரியா, சதீஷ் ஆகியோருக்கு நன்றி. முழுக்க முழுக்க இது ஒரு ஜாலியான படம். நல்ல ஜாலியாக வந்து பார்க்கலாம். படம் நல்லா வந்திருக்கு உங்கள் ஆதரவு தேவை எல்லோருக்கும் நன்றி.

நடிகர் சதீஷ் கூறியதாவது…

ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை ஆனால் நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் கூறுகையில்,

இந்தப் படத்தின் இயக்குனர் சுமந்த் மற்றும் கலை இயக்குனர் துரை சார் ஆகிய இருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் , அவர்களுடன் இணைந்து பணி புரிந்தது மிகவும் சுலபமாக இருந்தது, இந்தப் படத்தில் கலை வேலைப்பாடுகள் மிகவும் நன்றாக இருந்தது, எனவே பல்வேறு கோணங்களில் என்னால் காட்சிகளை படமாக்க முடிந்தது, இந்தப் படத்தில் நடிகர் அசோக் ஒரு புதிய தோற்றத்தை ஏற்று நடித்தார், அது இதுவரை வேறு எந்த படங்களிலும் இல்லாதவாறு அமைந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் பங்களிப்பதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தொகுப்பாளர் ராகுல் பேசியதாவது…

இந்தப் படம் மிக ஜாலியாக வேலை பார்த்தோம். எனக்கும் எடிட் செய்ய மிக ஈஸியாக இருந்தது. சுமந்த் அண்ணாவுக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரவி மரியா  கூறியதாவது…

3 வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்த அனுபவங்களை எல்லாம் கொட்டி தீர்த்து விடலாம் என போனால் பிரியா பவானி சங்கருக்கு அப்பா என்று சொல்லிவிட்டார்கள். பிரியாவுடன் நடிக்கலாம் என ஓகே சொல்லிவிட்டேன். டைரக்டர் மிக தெளிவானவர், ரீமேக் படத்தை கெடுக்காமல் அவருக்கு என்ன தேவை என்பதை சரியாக சொல்லி வேலை வாங்கி விடுவார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்துள்ளார், மலையாள படத்தை மிஞ்சும் வகையில் படத்தை எடுத்துள்ளார். அசோக் செல்வன் மிக நன்றாக நடித்துள்ளார். மிக எளிமையானவர். காமெடி மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.