கடந்த 10 ஆண்டுகளில், ETAKI ENTERTAINMENT சர்வதேச தரத்திலான அசல் படைப்புகளை உருவாக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில், காதலில் சொதப்புவது எப்படி, ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் போன்ற படைப்புகளின் மூலம் தகுதியான புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இன்று, எங்கள் நட்சத்திரம் சித்தார்த்தின் பிறந்தநாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், எங்கள் அடுத்த திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் “தயாரிப்பு எண். 4” (தற்போதைய தலைப்பு) இரண்டு நம்பமுடியாத திறமைகளை ஒன்றிணைக்கவுள்ளது. திறமையான மற்றும் உணர்ச்சிகரமான கதைசொல்லி S.U.அருண் குமார் (பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி) பன்முகத் திறமையும் தனித்துவமான நடிகருமான சித்தார்த்துடன் இணைந்து ஒரு முக்கியமான படைப்பை தரவுள்ளார். இது உலகளாவிய பார்வையாளர்களை கவரும் ஒரு அருமையான கிளாசிக் சினிமாவாக இருக்குமென நம்புகிறோம்.
எங்களின் புதிய முயற்சியான இப்படைப்பு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். சக்தியும் கருணையும் கொண்ட எங்களின் தெய்வமான முருகப்பெருமானின் ஆசீர்வாதத்துடன், எங்கள் கதை அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் பழனியில் தற்போது பரபரப்பான வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள், எங்களின் மதிப்புமிக்க வெளியீட்டு கூட்டணியாளர்கள் மற்றும் எங்களின் பட வெளியீட்டு உள்ளிட்ட விவரங்களை விரைவில் பகிர்வோம்.
திரைப்பட ஆர்வலர்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம், இந்த முக்கியப் படைப்பை விரைவில் உங்களுக்குக் காண்பிக்க ஆவலுடன் உள்ளோம். எப்போதும் ஆதரவு அளித்து வரும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நன்றி மற்றும் இந்த பயணத்தில் அவர்களின் உற்சாகமான ஆதரவை எப்போதும் போல எதிர்பார்க்கிறோம்