full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

சாட் பூட் திரி – திரைவிமர்சனம் 

சாட் பூட் திரி – திரைவிமர்சனம் 

 

ஒரு சிறிய இடைவெளிக்கு பின் வெளியாகி இருக்கும் குழந்தைகளுக்கான படம் தான் சாட் பூட் திரி குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு அற்புதமான படம் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த இடத்தில் வெங்கட் பிரபு சினேகா அருணாச்சலம் வைத்தியநாதன் பூவையார் மாஸ்டர் கைலாஷ் பல்லவி மாஸ்டர் வேதாந்த் சித்தார்த் யோகி பாபு சாய் தீனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஷாட் பூட் திரி

 

ஐடி கம்பெனியில் வேலை செய்யும் வெங்கட் பிரபு சினேகா இவர்களுக்கு ஒரு மகன் 24 மணி நேரமும் வேலை வேலை என்று அலையும் இவர்களுக்கு குழந்தையை கண்காணிக்கவும் நேரமில்லை. இதனால் மாஸ்டர் கைலாஷ் தனிமையில் மிகவும் வேதனை அடைகிறார் தனக்கு ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்றும் சொல்கிறார் அதற்கு சினேகா மறுக்கிறார். பின்னர் நான் ஒரு நாய் வளர்க்கிறேன் என்று சொல்கிறார் அதற்கும் சினேகா மறுக்கிறார். அதையும் மீறி ஒரு நாய்க்குட்டியை தன் நண்பர்களின் துணையுடன் வீட்டிற்கு கொண்டு வருகிறார். முதலில் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று அடம் பிடிக்கும் சினேகாவை ஒரு வழியாக சமாளித்து அந்த நாயை வளர்க்க சம்மதம் தெரிவிக்கிறார். 

 

உடன் பிறந்தவர்கள் இல்லாத கவலையை இந்த நாய் தீர்த்து வைக்கிறது நண்பர்களுடன் இந்த நாயுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் மாஸ்டர் கைலாஷ்க்கு ஒரு நாள் அதிர்ச்சி நாய் காணாமல் போகிறது எப்படி போனது என்று தெரியாமல் தவிக்கும் மொன்று நண்பர்களுக்கு பூவையார் மூலம் நாய் எப்படி காணாமல் போனது என்று தெரியவருகிறது.இந்த நாயை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் மீதி கதை 

 

இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் ஒரு சின்ன கருவை எடுத்து கொண்டு அதை மிகவும் அறிவு பூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் கொடுத்து இருக்கிறார் என்று தான் சொல்லணும். படத்தின் பலமே திரைக்கதை தான் சாதாரண ஒரு கதை ஆனால் மிகவும் ஜாலியான ஒரு திரைக்கதை மூலம் நம்மை ரசிக்க வைத்துள்ளார். அதோடு பெற்றோர்களுக்கு மிக சிறப்பான ஒரு கருத்தையும் முன் வைக்கிறார். 

 

படத்தின் பலம் நட்சத்திரங்கள் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக நடித்த நால்வரும் மிக பெரிய பலம் மாஸ்டர் கைலாஷ் பேபி பல்லவி சிங் சிறுவனகா வரும் வேதாந்த வசந்த் பூவையார் இந்த நால்வரின் நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது 

 

யோகி பாபு சிறிது நேரம் வந்தாலும் நம்மை சிரிக்கவைக்கிறார்.அதே போல வில்லனாக வளம் வந்த சாய் தீணா இதில் யோகிபாபுவுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

 

வெங்கட் பிரபு மற்றும் சினேகா குறைந்த காட்சிகள் வந்தாலும் வழியும் அப்பாவாக (மனைவிக்கு பயப்படும் கணவனாக) கலக்கியுள்ளார் பார்வையிலே மிரட்டும் மனைவியாக சினேகா மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 

படத்தின் மைனஸ் இசை பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி காதுகள் கூசுகிறது. இயக்குனரின் பலம் ஒளிப்பதிவாளர் அருமையான ஒளிப்பதிவு படத்துக்கு பலம் 

மொத்தத்தில் சாட் பூட் திரி மழலையின் வாசம் ரேங்க் 3.5/5