full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார்கள் : ஷாலினி பாண்டே

`அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலே நல்ல பெயரை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான `நடிகையர் திலகம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `100% காதல்’, ஜீவா ஜோடியாக `கொரில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறுகையில், “சினிமாவில் நடிக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும்படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை.

இதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில், நானும் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணம் உள்ளவர்கள். நன்றாக கவனித்தனர். ஒருமுறைகூட என்னை தவறாக பார்க்கவில்லை. அவர்கள் தொடர்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.

அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று பெயர் வாங்கி கொடுத்ததும் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். என் வாழ்க்கையில் கல்லூரியில் படிக்கும்போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து தோல்வியில் முடிந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது காதல் தோல்வியால் தவித்தேன். அப்போது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்.” என்று கூறினார்.