full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குனர் ஷங்கருடைய உதவி இயக்குனரின் குமுறல்!

பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரியும் உதவி இயக்குனர் ஒருவரின் குமுறல் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரளி மனோகர் என்கிற அந்த உதவி இயக்குனர், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..

”இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.

“கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி” – “என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்” என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப் படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை”.