சாகுந்தலம் – Movie Review

movie review

விஸ்வாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தையான சாகுந்தலா (சமந்தா) ஒரு மடத்தில் கண்வ மகரிஷியின் சொந்த மகளாக வளர்ந்து வருகிறாள். அப்போது ஒருநாள் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) ஊருக்குள் நுழைந்த விலங்குகளை துரத்திக் கொண்டே ஆசிரமத்திற்குள் வருகிறான் அப்போது சமந்தாவின் அழகில் மயங்கிய தேவ் மோகன் அவள் மேல் காதல் வயப்படுகிறான். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகின்றனர். அப்போது ஒருநாள் தேவ்மோகன் தான் அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்றும் விரைவில் திரும்பி வந்து உன்னையும் அழைத்து செல்வதாக சமந்தாவிடம் உறுதியளித்து விட்டு புறப்படுகிறான்.

Shankuntalam Trailer: Samantha Ruth Prabhu is breathtaking in Gunasekhar's grand film starring Dev Mohan | Regional-cinema News – India TV

இதற்கிடையே சமந்தா கருவுறுகிறாள். இதனால் தேவ் மோகனை தேடி அரண்மனைக்கு சென்ற சமந்தாவை நீ யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறி தேவ் மோகன் அவமானப்படுத்திகிறான். இறுதியில் சமந்தா தன் காதலனை கரம் பிடித்தாரா..? தேவ் மோகன், சமந்தாவை தெரியாது என்று கூறுவதன் காரணம் என்ன..? என்பதே படத்தின் மீதிக்கதை.மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் சமந்தா. சாகுந்தலையாக அவரது வசனங்களும் நடிப்பும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான முழு நடிப்பையும் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

Gunasekhar's 'Shakuntalam'- Who Should Be Blamed?

கதாநாயகனான தேவ் மோகன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரது வேடத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஹா அனைவரையும் கவர்கிறார்.புராணக் கதையை தற்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு படமாக எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் குணசேகர். படம் ரசிக்கும்படியாக இருந்தாலும் படத்தின் நகர்வு பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. பல முக்கிய கதாபாத்திரங்கள் மனதில் நிற்காமல் போனது ஏமாற்றம். திரைக்கதையை இன்னும் பலமாக அமைத்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சிகள் மிகவும் செயற்கையாக இருப்பது வருத்தமளிக்கிறது.மணி சர்மாவின் இசையும் பின்னணி இசையும் பெரிதாக கவரவில்லை . சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.