full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

‘சர்கார்’ கதையைக் கூறிய கே.பாக்யராஜ்: மன்னிப்பு கேட்ட சாந்தனு..!!

கே.பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில் “சர்கார்” கதையைக் கூறியதற்கு, சாந்தனு மன்னிப்புக் கோரியிருக்கிறார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். இதற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்திருக்கிறார். ‘சர்கார்’ படத்தில் பணிபுரிந்துள்ள எழுத்தாளர் ஜெயமோகனும் இப்படம் எப்படி உருவானது என்று தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று (அக்.30) வந்தது. யாரும் எதிர்பாராத விதமாக இருதரப்பும் சமாதானமாகச் சென்றார்கள். வருண் ராஜேந்திரனுக்கு படத்தில் க்ரெடிட் கொடுக்கப்படும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘சர்கார்’ கதை விவகாரம் தொடர்பாக கே.பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில் படத்தின் முழுக்கதையையும் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக உருவானது. பெரும் முதலீடு கொண்ட படத்தின் கதையை எப்படி தெரிவிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

தற்போது ‘சர்கார்’ கதை சர்ச்சை முடிந்துள்ள நிலையில், கே.பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன்  “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். படத்தின் கதையை அப்பா வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோருகிறேன். தவிர்க்க முடியாத சந்தர்ப்பம். இருப்பினும் மன்னிப்புக் கோருகிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரைக் கொண்டாடுவோம்”..!! 

இவ்வாறு சாந்தனு கூறியுள்ளார்.