full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஸ்ரேயா ரகசிய திருமணம்??

“எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. “மழை” படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர், ரஜினியுடன் “சிவாஜி”, விஜய்யுடன் “அழகிய தமிழ் மகன்”, விகரமுடன் “கந்தசாமி” போன்ற படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

தெலுங்கு, இந்தி என படு பிஸியாக நடித்து வந்தவர் சமீபமாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரேயா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், மார்ச் மாதத்தில் திருமணம் நடைபெரும் என செய்திகள் வந்தது. இந்த தகவல்கள் உண்மையானவை இல்லை என ஸ்ரேயா மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது திருமணம் ரகசியமான முறையில் நடைபெற்று முடிந்திருப்பதாக இப்போது தகவல் வந்திருக்கின்றது. கடந்த 12-ஆம் தேதியே தனது காதலர் ஆண்ட்ரே கோஸ்சி-யை மணமுடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரேயா-ஆண்ட்ரே கோஸ்சி இருவரது குடும்பத்தினரைத் தவிர, பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் நடிகை ஷபனா ஆஸ்மி மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.