full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

விலகல் ஏன்? விளக்கமளித்த ஸ்ருதிஹாசன்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க இருப்பதாக இருந்த இப்படத்தில் இருந்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனால் தொடர முடிய வில்லை என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்று தன் அறிவிப்பை வெளியிட்டது.

அதுகுறித்து ஸ்ருதிஹாசன் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகி வருகிறார்.