திடீர் பிரிவால் மனம் வாடும் ஸ்ருதி ஹாசன்!!

News
0
(0)


நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இயல்பில் பாடகியான இவர், சூர்யா நடித்த “ஏழாம் அறிவு” படத்தின் மூலம் நாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அஜித், விஜய் என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தவர், இந்தி தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது, தனது சொந்த நிறுவனமான “இஸிட்ரோ மீடியா சார்பில்” “த மஸ்கிட்டோ பிலாஸபி” என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார். இதனை “லென்ஸ்” திரைப்படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் பாசமாக வளர்த்து வந்த செல்லப்பிராணி (நாய்க்குட்டி) மரணமடைந்திருக்கிறது. இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அந்த நாய்க்குட்டி 2003 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் ஸ்ருதியுடன் வாழ்ந்திருக்கிறது. தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“சுமோ கேட்” நாங்கள் உங்களை மிகவும் இழக்கிறோம்! நான் சந்தித்த மிக அழகான நாயிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காக ஜாஸுக்கு நன்றி. சுமோ மிகவும் புத்திசாலி, அமைதியான, அன்பானவன். அவன் கிட்டத்தட்ட ஒரு ஜேன் நபர், மௌனமான ஞானமும் அன்பும் கொண்டவன்” என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.