ஆகஸ்டில் வெளிவரவுள்ள தனது சங்கமித்ரா பிரம்மாண்ட படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு முறை தோன்றிய ஸ்ருதிஹாசன், நீல் கெய்மேன் சிறுகதையை ஒட்டி உருவான “ஹௌ டு டாக் டு கேர்ள்ஸ்” நிகழ்ச்சியின் ப்ரீமியரில் நாவலாசிரியரான நீல் கெய்மனின் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நீல் கெய்மன், ஸ்ருதிஹாசனுக்கு பிடித்த நாவலாசிரியர் ஆவார். ட்விட்டர் வழியாக அறிமுகமான அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தனர் மற்றும் தொடர்பில் இருந்தனர். ஸ்ருதிஹாசன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகிறார் என்பதை அறிந்த நீல் தனது சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இருக்க ஸ்ருதியைக் கேட்டுக்கொண்டார்.
நீல் அழைப்பைப் பற்றி ஸ்ருதி பேசுகையில், “இந்த படத்திற்காக அழைக்கப்பட்டேன் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீல் எனக்கு பிடித்த எழுத்தாளர் மற்றும் நான் அந்த படத்தையும் நேசிக்கிறேன்” என்று கூறுகிறார்.
முன்னதாக ஸ்ருதிஹாசன் குறித்து நீல், “முதலில் நாங்கள் ஒருவருக்கொருவர் ட்விட்டரில் எதிர்கொண்டோம், நான் இந்தியாவைப் பார்க்க விரும்பியதைக் குறிப்பிட்டேன், ஸ்ருதி உதவ முன்வந்தார். அவர் என்னுடைய ஒரு பெரிய ரசிகர். பல திரைப்படங்கள் மற்றும் இசையில் அவரது திறமையை நான் பார்த்து வியந்தேன். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் அவரது இசை குறிப்பிடத்தக்கது. அவருக்காக புத்தகங்கள் அனுப்பி வைத்தேன்.” என்று பேசியிருக்கிறார்.
ஷரீஜா ராஜகோபாலால் சிகை அலங்காரம், தாரின் கெல்லியால் ஒப்பனையுடன் கண்கவரும் கருப்பு உடையில் தோன்றினார் ஸ்ருதி ஹாசன்.