full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் சிபி ராஜ் நடிக்கும்   “ரேஞ்சர் “

திரையுலகில் மதிக்கத்தக்க படைப்புகளை தயாரித்தும், விநியோகித்தும், நன்மதிப்பை பெற்ற நிறுவனமான ஆரா சினிமாஸ் தன் அடுத்த படைப்பை தொடங்கியுள்ளது. ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி தயாரிப்பில்  சிபிராஜ் நடிப்பில்  “ரேஞ்சர்” படம் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது.

“ஆவ்னி” எனும் புலி பல  மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது.   மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த  உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் தான் “ரேஞ்சர்”

“பர்மா” , “ராஜா ரங்குஷ்கி” “ஜாக்சன் துரை “ போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் மகேஷ் ஜி படம் பற்றி கூறியதாவது…
“ரேஞ்சர்” படத்தின் திரைக்கதை வியக்கத்தக்க வகையிலானது. இதுவரை நாம் மனிதர்களை தாக்கும் விலங்குகளை மையமாக கொண்ட படங்கள் நிறைய  பார்த்திருப்போம்.  அவையாவும் கற்பனை களம்களை கொண்டது. ஆனால் ரேஞ்சர் அப்படியானது அல்ல. நம் நாட்டில் நடைபெற்ற நம்பமுடியாத உண்மை சம்பவத்தை,  நம்மை பீதியில் ஆழ்த்தும் வகையிலான சம்பவத்தை அடிப்படையாக கொண்டது “ரேஞ்சர்”.

இயக்குநர் தரணிதரன் மிக வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ரசிகனை கட்டுக்குள் வைக்கும் வித்தை தெரிந்தவர். இப்படத்தில் மிகச்சரியான விதத்தில் திரில்லும்,  கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த திரைக்கதையை தந்துள்ளார்.
நடிகர் சிபிராஜ் இப்படத்தில் இணைந்தது இப்படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது. மிகவும்  தேர்ந்த கதைகளில் நடித்து வரும் சிபிராஜுக்கு இப்படமும் இன்னும் ஒரு படி மேலே அவரது உயரத்தை கூட்டும்.

இப்படம் ரசிகர்களுக்கு நேரடி பிரமிப்பு அனுபவம் தரும் வகையில் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேஷ பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. நிறைய சிஜி, VFX காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் அதைத் தத்ரூபமாக தர ஹாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய உள்ளார்கள்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன், மது ஷாலினி தவிர்த்து மேலும் பல முக்கிய நடிகரகள் இப்படத்தில் பங்குபெற உள்ளார்கள். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.

படத்தின் முன் தாயாரிப்பு பணிகள் தற்போது மிகத்திவீரமாக நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.