கமல், ரஜினி படத் தலைப்புகளில் சிபிராஜ்

News

‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் புதிய படத்திற்கு கமல் நடிப்பில் 90-களில் வெளிவந்த ‘சத்யா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து சிபிராஜ் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற பெயரை வைத்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். சிபிராஜுக்கு ஜோடியாக ‘கிடாரி’, ‘வெற்றிவேல்’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா விமல் நடிக்கிறார். ராம்ஜீவன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தை விஜய் செல்லையா என்பவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.