full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கசப்புகள் மறந்து கைகோர்க்கும் “ட்ரிபிள் ஏ” டீம்!!

அரசியலில் எப்படி நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லையோ.. அது போலத் தான் சினிமாவிலும். திடீர் திடீரென சில மோதல்கள் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி பரபரப்பாக்கும். ஆனால் சில நாட்கள், மாதங்கள் கழித்து அடித்துக் கொண்டவர்கள் மீண்டும் இணைந்து “நண்பேண்டா” சொல்லிக் கொள்வார்கள்.

அதுதான் சிம்பு – ஆதிக் ரவிச்சந்திரன் விசயத்திலும் நடந்திருக்கிறது. “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் கூட்டணி சேர்ந்த இவர்கள், பல போராட்டங்களுக்குப் பிறகு படம் வெளியாகி பிளாப்பானதும் ஆளாளுக்கு பழி போட்டு பிரிந்து போனார்கள்.

அதிலும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் – ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து புகார் கடிதம் வாசிக்க, மறுபக்கம் சிம்பு- ஆதிக் ரவிச்சந்திரனிடம் “ஏண்டா தம்பீ இப்படி பண்ணின” என்று நீதி கேட்கும் ஆடியோவும் வெளியாகி வைரலானது.

இப்போது விஷயம் என்னவென்றால், சிம்புவும்-ஆதிக் ரவிச்சந்திரனும் கசப்புகளை மறந்து மீண்டும் இணையவிருக்கிறார்களாம். ஆதிக் தற்போது ஜீ.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்ததும் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும், அந்தக் கதை சிம்புவுக்கும் பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.

நிச்சயம் அது “ ட்ரிபிள் ஏ” படத்தினுடைய சீக்குவல் இல்லை என ஆதிக் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லவேளை அது இல்லை என உறுதி செய்தார்கள், இல்லையேல் பாவம் ரசிகர்கள்!!