full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தடதடக்கும் சிம்பு.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்!!

சிம்புவும், சர்ச்சையும் கூடப் பிறந்த பிறப்புகளோ என்னுமளவிற்கு, அவரை சச்சரவுகள் பின் தொடர்ந்தே வரும். ஷூட்டிங்கிற்கு சீக்கிரம் வரமாட்டார், ஷெட்யூலை இழுத்தடிப்பார் என சிம்பு மீது புகார்கள் குவிந்த வண்ணம் தான் இருக்கும். கடைசியாக வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படம் வெளியான போது தான் பிரச்சனை பூதாகரமாக வெடித்து, சிம்புவுக்கு தடை விதிப்பது வரை போனது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி, மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். சிம்பு, மணிரத்னம் படத்திலா? பாவம்பா மணிரத்னம் என்று பலரும் பரிகாசம் செய்தார்கள். அத்தனை பேரின் எண்ணங்களையும் பொய்யாக்கிய சிம்பு, ஆச்சர்யப்படுத்தும் வகையில் சொன்ன தேதியில் அவரது போர்ஷனையும் முடித்துக் கொடுத்து “குட் பாய்” பெயர் எடுத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வெங்கட் பிரபு, கார்த்திக் நரேன் என டாப் டைரக்டர்களின் படங்களில் கமிட் ஆகி எல்லோரது புருவங்களாஇயும் உயரச் செய்துள்ளார் சிம்பு.

இவ்விரு படங்களில் வெங்கட் பிரபு இயக்குவதை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்.. கார்த்திக் நரேன் இயக்கும் படத்தை “விஜயா புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனமும் தயாரிக்க இருக்கிறார்கள். இவை முடிந்த பிறகு, கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் “விண்ணைத்தாண்டி வருவாயா 2” படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியோ, வம்பு தும்பு இல்லாமல் சிம்பு இதே போல் வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களது ஆசை.