full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

“நண்பேன் டா” கொண்டாட்டமாக்கிய சிம்பு-தனுஷ்!

நண்பா வா நாம் அப்பவும் இப்பவும் எப்பவும் கிங் தான்…
நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றான ஒலிம்பிக் ரிங் தான்.. என பாட்டு மட்டும் தான் பாடவில்லை சிம்புவும், தனுஷும்!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “சக்கபோடு போடு ராஜா” படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. சாதாரணமான விழாவாக நடந்திருக்க வேண்டியதை சிம்பு-தனுஷ் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களை பரவசமாக்கினார்கள். காலங்காலமாக இருந்துவரும் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் போட்டிக்கு பிறகு அடுத்த தலைமுறை ரசிகர்கள் சிம்பு-தனுஷ் இருவரையுமே போட்டி நடிகர்களாக கருதுகிறார்கள்.
அவர்கள் இருவருமே பல படங்களில் “பஞ்ச்” வசனங்கள் பேசுவதன் மூலம் தங்கள் ரசிகர்களை உசுப்பிவிட்டே வந்திருக்கிறார்கள்.

சமீப காலமாக சிம்பு-தனுஷ் இருவரும் நெருக்கமாக நட்பு பாராட்டி வருவதாக பரவலாக பேசப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் ஒரே மேடையில் கட்டிப் பிடித்து, புகழ்ந்து பேசி அதை உறுதி செய்திருக்கிறார்கள் இருவரும்.
முதலில் பேசிய தனுஷ் ஏகபோகத்துக்கு சிம்புவின் திறமைகளை அடுக்கி பாராட்ட, சிம்பு ரசிகர்கள் அரங்கத்தைத் தெறிக்கவிட்டார்கள். பதிலுக்கு சிம்புவும் தனுஷை புகழ்ந்து தள்ள விழா சக்க போடு போட்டது.

முதலி பேசிய தனுஷ், “நானும் சிம்புவும் ஒரே வருடத்தில் தான் கதாநாயகர்களாக அறிமுகமானோம். நான் பிழைப்பிற்காக வேறு வழியின்றி நடிகனானவன், சிம்பு பிறப்பிலிருந்தே நடிகராக இருப்பவர். அவர் அளவிற்கு என்னால் இன்று கூட நடனமாட முடியாது. அவர் ஒரு பலகலை வித்தகர். 21 வயதில் ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுப்பதெல்லாம் சாதாரணமான விஷயமில்லை. இன்று விழா நாயகன் சிம்பு, இசையமைப்பாளராகவும் தன்னை நிருபித்திருக்கிறார். இன்று சிம்புவின் ரசிகர்கள் என்னை கௌரவித்திருக்கிறார்கள், நாளை என் ரசிகர்களும் சிம்புவிற்கு இதேபோல் மரியாதை செய்வார்கள்” என்று நெகிழ்வோடு பேசினார்.

பின்னர் பேசிய சிம்பு, “நான் இதுவரை யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லை. அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாக யாராவது கருதினால் அவர்களிடம் இங்கே, இப்போதே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகத்திலிருந்து என்னை எல்லோரும் வேரொறுவனாக பார்க்கிறார்கள், அது யேன் என்று உணரவே எனக்கு பல நாட்கள் ஆகியிருக்கிறது. நான் இறைவனை நம்புகிறேன், தாயை விட இறைவனுக்கே நான் முக்கியத்துவம் தந்து வைதிருக்கிறேன். எல்லோரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதான் சொல்வார்கள். நானோ, தெய்வம், பிதா, குரு, மாதா என்று தான் வணங்குவேன். இதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். என் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள், ஆனால் நான் எங்கும் ஓடவில்லை இங்கு தான் இருக்கிறேன். இப்போது கூட மணிரத்னம் சார் என்மீது நம்பிக்கை வைத்து கூப்பிட்டிருக்கிறார். என் ரசிகர்கள் தான் என் உயிர். அவர்களுக்காக மட்டும் தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை விட்டு நான் எங்கும் போகமாட்டேன்” என்று பேசினார்.

ரசிகர்கள் சிம்புவை பாட சொல்லி கேட்க, “ரத்தம் என் ரத்தம்.. நீதாண்டா ரத்தம்.. விண்ணைத்தாண்டி கேட்குமட நம்மளோட சத்தம்” என்ற பாடலை பாடி அவரது ரசிகர்களை குஷியாக்கினார். எது எப்படியோ சிம்பு-தனுஷ் நட்பு பாராட்டிய அழகே அழகு தான். திருஷ்டி சுத்திப் போட்டுக்கோங்க பாஸ்!!