full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சிம்புவின் இசை வெளியீட்டுத் தேதி!

தமிழ் சினிமாவில் டி.ராஜேந்தர் தொடாத துறையே இல்லை என்னும் அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, தயாரிப்பு அத்தனையையும் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர்.

டி.ராஜேந்தரைப் போலவே அவரது மகனாகிய நடிகர் சிலம்பரசனும் கதை, வசனம், இயக்கம் பாடல்கள் என பலதுறை கலைஞனாக நிரூபித்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது எல்லோரும் அறிந்தது தான்.

தான் அறிமுகப்படுத்திய சந்தானத்தின் நடிப்பில் உருவாகிற ”சக்கப் போடு போடு ராஜா” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிற சிம்புவின் இசையில் ஏற்கனவே “கலக்கு மச்சான்” என்னும் பாடல் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் சிம்புவின் நெருங்கிய நண்பர்களாகிய அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறிப்பிடத் தக்கது.