full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு

சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர்.

அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு செய்து காட்டியிருக்கிறார். சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாம். 22 நாட்களில் சிம்பு இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ஒரிரு நாட்கள் ஓய்வெடுக்க உள்ள சிம்பு, அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இதன் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9-ந் தேதி தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.