full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஓவியாவுடன் திருமணமா? – சிம்பு தரப்பு விளக்கம்

சில நாட்களாக ஓவியாவை திருமணம் செய்யவுள்ளார் சிம்பு என்று செய்திகள் வலம் வந்த வண்ணமுள்ளன. இதனை சிம்புவே ட்வீட் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து சிம்பு தரப்பில் விசாரித்த போது, “ஒரு செய்தி வந்தால், அதனை செக் செய்து கொள்ளாமல் வெளியிடுகிறார்கள். சிம்புவின் ட்விட்டர் கணக்கில் அப்படியொடு ட்வீட் வரவே இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

ஒருவர் மற்றவர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, குற்றம்சாட்டுவதை விடுத்து, அவர்களை தனியாக விடுவது நல்லது. நான் யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. ஓவியா எப்படி இருக்கிறாரோ அது எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். தெளிவாக சொல்லிவிட்டேனா?” இது தான் சிம்பு தரப்பில் ட்வீட் செய்யப்பட்டது.

தனது அடுத்த படத்துக்கான கதை விவாதம், மற்றும் ‘சக்கப் போடு போடு ராஜா’ பாடல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் தனது அடுத்த படம் பற்றி முறையான அறிவிப்பை வெளியிடுவார். மேலும், அவரைப் பற்றிய தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்கள்.