full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வொர்க்-அவுட் ஆகுமா சிம்ரனின் ராசி?

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை கொடி கட்டிப் பறந்த கதாநாயகி நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்களின் ஆதர்ஷமாக விளங்கிய அன்றைய நயன்தாராவாக இருந்தார். அவரது நடனத் திறனுக்கு ஈடாக ஆடக்கூடிய நடிகையை இப்போது வரை தமிழ் சினிமா கண்டு பிடிக்கவில்லை.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தவர், சுந்தர்.சி நடிப்பில் வெளியான “ஐந்தாம் படை” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் மிரட்ட்லான வில்லியாக கெத்து காடியவர், இப்போது மீண்டும் வில்லியாகவே களமிறங்குகிறார்.

ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சீமராஜா” படத்தில் சிம்ரன் தான் வில்லியாம். ஏற்கனவே “ ஒன்ஸ்மோர்”, “நட்புக்காக”, “பார்த்தேன் ரசித்தேன்” போன்ற வெற்றித் திரைப்படங்களில் எதிர்மறை எண்ணம் கொண்டவராக நடித்து தூள் கிளப்பியவெர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது இந்தப் படத்திற்கும்.

அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கார்த்திக் சுப்புராஜ் படத்திலும் சிம்ரனுக்கு வில்லி கதாபாத்திரமாக இருக்குமோ? என இப்போதே கிசுகிசுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.