லாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு மாதத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் கார்த்திகேயா சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். தான் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர் “லாக்டவுனால் எங்களது திட்டங்கள் மாறலாம். ஆனால் எங்களது இலக்கு மாறாது” என குறிப்பிட்டுள்ளார்.