ஸ்மைல் மேன் – திரைவிமர்சனம் – 3/5
சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் ஷியாம் – ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “தி ஸ்மைல் மேன்”.
கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் உள்ளிட்டவர்கள் படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.
எடிட்டிங்கை ஷான் லோகேஷ் செய்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், படம் என்ன மாதிரியான விமர்சனத்தை பெற்றுள்ளது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம். சரத்குமாரின் 150வது படம் தான் இந்த ஸ்மைல் மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைக்குள் போகலாம் :
தலையில் பலமாக அடிபட்டு, சிகிச்சைக்குப் பின் மெதுவாக மீண்டு வருகிறார் சரத்குமார். ஆனால், ஒருவருடத்தில் ஞாபகசக்தியை எல்லாம் இழந்து விடுவீர்கள் என்று மருத்துவர் கூற அதிர்ச்சியாகிறார் சரத்குமார்.
தொடர்ந்து, பல நாட்களுக்கு முன் கோயம்புத்தூரை அதிர்ச்சியாக்கிய ஸ்மைல் மேன் மர்டர் மீண்டும் அரங்கேறுகிறது. மனிதர்களை கடத்திச் சென்று, அவர்களின் வாயை கிழித்து அதில் மகிழ்ச்சி கொள்வது ஸ்மைல் மேன் கில்லர் வழக்கம்.
இந்த வழக்கை விசாரிக்கிறார் ஸ்ரீகுமார். பல வருடங்களுக்கு முன் இதே ஸ்மைல் மேன் கில்லர் வழக்கை விசாரித்த சரத்குமாரும் ஸ்ரீகுமாரோடு இணைந்து வழக்கை விசாரிக்கிறார்.
ஸ்மைல் மேன் கில்லர் வழக்கால் தான் தன்னுடைய வாழ்க்கையே திசை திரும்பியது என்றுணர்ந்து அந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார் சரத்குமார்.
இறுதியில், யார் அந்த ஸ்மைல் மேன் கில்லர்.?? எதற்காக இந்த கொலைகளை செய்கிறான் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகனான சரத்குமார், இப்படத்தின் கதையை நன்கு உணர்ந்து அதற்கு என்ன மாதிரியான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்றுணர்ந்து அதை மட்டும் அளவாக கொடுத்து மிளிர்ந்திருக்கிறார். தனது அனுபவ நடிப்பால் அக்கதாபாத்திரத்தை பெரிதாக தாங்கிச் சென்றிருக்கிறார் சரத்குமார். விபத்திற்கு முன் விபத்திற்கு பின் என இருவேறு தோற்றத்தில் தோன்றி தனது சிகை, முக அலங்காரத்தையும் தாண்டி உடல் மொழியிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார் சரத்குமார்.

ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை நாளம் போர் தொழில் படத்தின் சாயலை சற்று உரசிச் சென்றாலும், திரைக்கதை சென்ற விதம் படத்தினை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
அதிலும் குறிப்பாக படத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் முதல் காட்சியில் ஆரம்பித்து பி ஜி எம்’ல் மிரள வைத்துவிட்டார் இசையமைப்பாளர்.
ஒளிப்பதிவும் இப்படத்தில் மிகப்பெரும் பங்கை வகித்திருக்கிறது. இறந்தவர்களின் முகங்களை காட்சிப்படுத்திய விதம், படம் பார்ப்பவர்களை பயமுறுத்தி விடும்.
திரைக்கதை நகன்ற விதம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று என்பதால், சீட்டின் நுனியில் அமர வைத்து விட்டார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை ஏற்றியிருக்கிறது.
ப்ளாஷ் பேக் காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம் மேலும், ஸ்மைல் மேன் கொலை செய்யும் காரணத்தையும் சற்று வலுவானதாக கொடுத்திருந்திருக்கலாம்.