ஓடிடி தளத்தில் வெளியாகும் சூரரைப்போற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Special Articles

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படாமல் இருந்தது. தியேட்டர்கள் திறந்ததும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என்று அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.