full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் படம்

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘அறம் செய்து பழகு’. இதில் ஹீரோவாக விக்ராந்த் மற்றும் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ஹீரோயினாக மெஹ்ரீன் நடித்துள்ளார். மேலும், ஹரிஷ் உத்தமன், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

கோலிவுட்டில் ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும், டோலிவுட்டில் ‘லக்‌ஷ்மி நரஷிம்ஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனமும் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். தற்போது, சுசீந்திரன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அறம் செய்து பழகு திரைப்படத்தை அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ போல், முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்து உள்ளனர்.

கல்லூரி மாணவர்களைச் சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம். இம்மாத இறுதியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிட இருக்கிறோம்.’ என்று கூறியுள்ளார்.