full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வதந்திகள் வருத்தமளிக்கிறது : எஸ்.பி.பி

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். சில சமூக வலை தளங்களில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால், பல நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு சென்றால் கூட, அதை பெரியதாக்கி உடல் நிலை மோசமாக இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு என் சகோதரி உயிரிழந்து விட்டார். அதற்காகத் தான் நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன்.

எதற்காக என்னைப்பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தேவையில்லாத வதந்திகளால் பலரும் வருத்தமடைகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளைப் பரப்பாதீர்கள். நான் நலமாக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.