ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது

cinema news
0
(0)

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அறக்கட்டளை அண்மையில் ‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஷாருக் கானின் நடிப்பில் உருவான ‘ஜவான்’ உலகளவில் வெளியானது. இந்த திரைப்படம் – நடிகருக்கு சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ஷாருக்கான் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

அவரது ரசிகர்களுடன் ஈடுபாட்டுடன் அவர் நடத்தும் #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் தனது அறக்கட்டளையின் பணிகள் குறித்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். இது பற்றி மேலும் அவரிடம் கேட்டபோது, ” நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த நம்மால் முடிந்தவரை பலருக்கு உதவுகிறோம். அதைப் பற்றி பேச வேண்டியதில்லை. ஆனால் மிகவும் உற்சாகமாக அவர்களிடத்தில் ‘ஜவான்’ திரைப்படத்தை திரையிடுமாறுச் சொன்னேன். இந்த வாரம் முழுவதும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் ‘ஜவான்’ திரைப்படம் திரையிடப்படும்” என பணிவுடன் பதிலளித்தார் ஷாருக்கான்.

ஷாருக்கானின் மீர் அறக்கட்டளையில் அமில வீச்சில் உயிர் பிழைத்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், வீதியோர குழந்தைகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடியின குழந்தைகள், மாற்று திறனாளிகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

பல நபர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்களுக்கு இது அவர்களின் முதல் திரையரங்க வருகையாகவும் இருந்தது. இதன் விளைவாக அவர்களிடத்தில் மகிழ்ச்சியான புன்னகையும் பூத்தது.

மகிழ்ச்சி மற்றும் மனதை கவரும் தருணங்களை தொடர்ந்து பரவ செய்வதற்காக.. ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை – நாடு முழுவதும் இதே போன்ற சிறப்பு திரையிடல்களை இந்த வாரம் முழுவதும் நடத்துகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.