full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

 

இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான ‘டங்கி’ திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு ‘டங்கி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தற்போது அதன் பெருமைக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டங்கி’ திரைப்படம்- இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும். இத் திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102. 50 கோடியாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக ‘டங்கி’ இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.