ஸ்டார் – திரைவிமர்சனம்
தொடர் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்த கவின்யின் அடுத்த படைப்பு தான் ஸ்டார் இந்த படம் அவருக்கு வெற்றியா இல்லை என்ன என்று பார்ப்போம்.
இயக்குனர் இலன் இவருக்கு இது இரண்டாவது படம் இந்த படத்தில் கவின் , லால், அதிதி பொன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம்,மற்றும் பலர் நடிப்பில் பி வி எஸ் என் பிரசாத், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் எழிலரசு கே ஒளிப்பதிவில் இலன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் “ஸ்டார்”
சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த தந்தை அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கலையை ( கவின்) நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார். சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார். கலையும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அதில் தீவிர கவனம் செலுத்துகிறான். படிப்பு இரண்டாம் பட்சம் தான் நடிப்புதான் முதல் முக்கியத்துவம் என்று பறக்கிறான். அவனது வாழ்வில் இரண்டு பெண்கள் குறிப்பிடு கின்றனர். காதல் அவனை உற்சாக மூட்டுகிறது சில சமயம் மனதை உடைத்தெறிகிறது. இந்நிலையில் விபத்தில் சிக்குகிறான் கலை.. . அதன் பிறகு அவன் நடிகனாகும் கனவு தகர்ந்து போகிறது. காதலி அவனை விட்டு பிரிகிறாள். நண்பர்கள் மற்றும் குடும்பம் மட்டுமே உடன் இருக்கின்றனர். புதிய காதலி அவனுக்கு தெம்பூட்டுகிறாள். இறுதியில் கலை நடிகனாக முடிந்ததா அல்லது குடும்ப வாழ்விலேயே தன் தந்தையைப் போல் சிக்கி எதார்த்த வாழ்க்கைக்கு ஆட்பட்டு போனானா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
கவின் இதுவரை காதல் கலாட்டா என்று வளம் வந்தவர். ஆனால் இந்த படத்தில் தன்னை முழுமையாக புதிய பரிமாணத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து இறுக்கிறார். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். படத்தில் பல இடங்களில் மிக நேர்த்தியான நடிப்பின் மூலம் நம்மை தருகிறார்.மிகவும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் தன்னை சிறந்த நடிகன் என்று பல இடங்களில் நிரூபித்துள்ளார்.
பிரித்தியை தன் காதல் வலைக்குள் கொண்டுவர கவின் ஆடும் இளவட்ட ஆட்டம் ரசிக்கும்படி உள்ளது. பிரீத்தி வீட்டுக்கு சென்று காதல் சொல்வதும் பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்வதும் சுவாரஸ்யம்.
கவின் காதலிகளாக அதிதி, பிரீத்தி என இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இடைவேளை வரை வரும் ப்ரீத்தி மனதை உடைத்து விட்டு செல்கிறார், இடைவேளைக்கு பிறகு வரும் அதிதி உடைந்த மனதை ஒட்ட வைத்து ஒத்தடம் தருகிறார்.
கவின் தந்தையாக லால் நடித்தி ருக்கிறார். எத்தனை வயது ஆனாலும் தன் நடிப்புக்கு மட்டும் வயது ஆகாது என்பதை சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் கீதா கைலாசமும் தன் மகன் எங்கே வீணாக போய் விடுவானோ என்று பயந்து அவ்வப்போது கவினை கண்டிக்கும் போது நம் அம்மாக்கள் கண்முன் வந்து நிழலாடுகின்றனர்.
எழிலரசு கேமரா இதயத்தில் ஓவியம் தீட்டுகிறது.
இயக்குனர் இளன் கதைக்களத்தை காதல் ஆக்சன் சென்டிமென்ட் என்று பரவலாக்கி அனைத்து தரப்பையும் கவரும் விதத்தில் அமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ்சில் அவர் வைத்திருக்கும் திருப்பம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அரங்கை விட்டு வெளி வரும்போது அது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி பட்டிமன்றமாக கூட மாறி விடுகிறது. ஒருவகையில் இதுவும் வெற்றியின் சூத்திரமாக கூட அமைந்து விடும்
மொத்தத்தில் ஸ்டார் ஜொலிக்கிறது.