full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்

ஐபிஎல் 2018 சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு, ரஹானேவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது பூதாகரமானது. அதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேன்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போட்டி நடைப்பெறும் போதே ஆஸி கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் மற்றும், துணை கேப்டனான டேவிட் வார்னரின் பதவி பறிக்கப்பட்டு, விக்கெட் கீப்பர் டிம் பெய்னி கேப்டனாக செயல்பட்டார்.

ஸ்டீவ் ஸ்மித்

மீண்டும் அசிங்கப்படும் ஸ்மித்

இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் ராஜஸ் தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில் ஸ்மித்தை நீக்கி ராஜஸ்தானின் புதிய கேப்டனாக இந்திய வீரர் ரஹானேவை அணியின் இணை உரிமையாளர் மனோஜ் பதாலே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.