14 ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருது சிறந்த நடிகர் சிம்பு

cinema news

14 ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருதுகள் சென்னை வர்த்தக மையத்தில் இனிதே நடைபெற்றது இவ்விழாவில் 2020 & 2021 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது அதில் சிறந்த நடிகராக மாநாடு கதாநாயகன் சிலம்பரசனும், சிறந்த நடிகையாக ஜெய் பீம் கதாநாயகி லிஜோமொல் ஜோஸ், அவர்களுக்கும் சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த பின்னணி பாடகி சைந்தவி க்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருது சினேகன், பதில் அவருடைய மனைவி கனிகா பெற்றுக்கொண்டார்.

சிறந்த துணை நடிகை டாக்டர் படத்திற்காக அர்ச்சனா அவர்களும், சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையா அவர்களும், சிறந்த குணசித்திர விருது ஜெய்பீம் மணிகண்டனுக்கும் சிறந்த குணச்சித்திர நடிகை கர்ணன் படத்தில் நடித்த கௌரி ஜி கிஷன் அவர்களுக்கும், சிறந்த படத்தொகுப்பு பிரவீன் கே எல் அவர்களுக்கும் சிறந்த கதைக்கான விருது ஜெய் பீம் தா சே ஞானவேல் அவர்களுக்கும், சிறந்த அறிமுக நடிகையாக லொஸ்லியா அவர்களுக்கும் சிறந்த வில்லனாக ஜெய் பீம் படத்தில் நடித்த தமிழ் அவர்களுக்கும், சிறந்த நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் அவர்களுக்கும் சிறந்த கேமராமேன் மாநாடு படத்தில் ரிச்சர்ட் மகேஷ் அவர்களுக்கும், சிறந்த நாயகன் மற்றும் வில்லனாக எஸ் ஜே சூர்யா அவர்களும் சிறந்த கிராமிய பாடகராக அறிவு அவர்களுக்கும், பாடகியாக கிடக்குழி மாரியம்மா அவர்களுக்கும், வளர்ந்து வரும் நடிகையாக திவ்யபாரதி அவர்களுக்கும் இசை அரசர் விருது டி இமான் அவர்களுக்கும் சிறந்த அயல்நாட்டு படத் தயாரிப்பாளராக அருமை சந்திரன் அவர்களுக்கும், சிறந்த அறிமுக இசையமைப்பாளராக டிஎம் உதயகுமார் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் திரை உலக முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் அயல்நாட்டு தூதர்கள் பல்வேறு நாட்டு தமிழ் திரை ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்த நிகழ்வை எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் பன்னாட்டு தொடர்பாளர் தீனதயாளன் மலேசியா அவர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவாக செயல்பட்டனர்