அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளின் மீது வரும் நவம்பர் மாதத்தில் இருந்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக., எம்.பி. சுப்ரமணிய சாமி கட்டாய ஆதார் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் விவரமாக கடிதம் எழுதவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் முடிவை சுப்ரீம் கோர்ட் முறியடிக்கும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.