full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

வெற்றி, தோல்வி இரண்டும் சமம் – நடிகை சாய்பல்லவி

கொரோனா ஊரடங்கில் நடிகை சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:

“நல்லது கெட்டது எது நடந்தாலும் நமது நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து விட்டேன். எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தொடர்ந்து வெற்றியை பார்க்கும் நான் படம் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று கேட்கிறார்கள். எது வந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைத்துக்கொள்வேன்.

வெற்றிக்காக ரொம்பவும் சந்தோஷப்பட மாட்டேன். தோல்வி என்றால் அதையே நினைத்து அழுதுகொண்டும் இருக்க மாட்டேன். வெற்றி தோல்வியை சமமாகவே எடுத்துக்கொள்வேன். அதுதான் நல்லது. எது வந்தாலும் நம் நல்லதுக்கு என்ற பார்வையோடு பார்த்தால் அந்த கஷ்டம் நம்மை சோர்வடைய வைக்காது.

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது 3 இயக்குனர்கள் நடிக்க அழைத்தனர். சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிரேமம் படத்தில் அறிமுகமானேன். அந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது. யார் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் முன்பே எழுதி வைத்து இருப்பார். நம் வேலையை செய்வோம். பலனை எதிர்பார்க்க வேண்டாம்.”

இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.