‘மிஜா’, ‘கிடாரி’, ‘குற்றம் 23’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சுஜாவரூணி.
“எனக்கு வாய்ப்பளிப்பதற்காக, என்னைத் தேடி வரும் இயக்குனரிடம் முதலில் நான் திறந்த மனதுடன், கதையை கேட்கிறேன். ஒரு காட்சியில் வந்தாலும் ‘நச்’ சென்று ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை.
இயக்குநர்கள் பாலா, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடிப்பதற்கு விரும்புகிறேன். திரைக்கதையின் உணர்வோட்டத்திற்கேற்ப ஆடையில்லாமல் நடிப்பதற்கான துணிச்சலும் இருக்கிறது. கவர்ச்சிக்காகவே செயற்கையாகத் திணிக்கப்படும் காட்சிகளில் ஆபாசமான ஆடையணிந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லும் துணிவும் இருக்கிறது.
ஒரேயொரு பாடல் காட்சியில் தோன்றுவதில்லை. எதிர்காலத்திலும் இந்த முடிவில் நான் உறுதியாக இருப்பேன்.
தற்போது, அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்திலும், கதிர் நடிக்கும் ‘சத்ரு ’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். இதில் சத்ரு படத்தில் ஒரு கேங்ஸ்டராக நடித்திருக்கிறேன். சமுத்திரகனி நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அடுத்த மாதம் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் ‘அட்சயன்ஸ்’ என்ற படத்தில் ‘பஞ்சமி’ என்ற தமிழ் பேசும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்”.