full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

மிகப் பிரமாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –  வெற்றி பழனிச்சாமி,  சர்வேஷ் முராரி.  இசை  –     டூபாடு   பின்னணி இசை   –    எஸ்.தமன்  எடிட்டிங் –  ரூபன்  கலை –   ஆர்.ஜனார்த்தன்

ஸ்டண்ட்  –       சூப்பர் சுப்பராயன்.  நடனம்  –    ராகவா லாரன்ஸ்  பாடல்கள் –    விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன். தயாரிப்பு மேற்பார்வை  –  விமல்.ஜி

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்.  இதற்கு முன்பு வந்த முனி காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது. பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

இந்த கோடையை கொண்டாட குடும்ப படமாக முனி 4  காஞ்சனா 3 இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து தந்திருக்கிறார் லாரன்ஸ்