full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மூவரில் ஒருவராக சுனைனா

`எமன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது சீனு வாசன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் `அண்ணாதுரை’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி’ படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் `காளி’ படத்தில் நடிக்கவுள்ள மூன்று நாயகிகளில், ஒரு நாயகியாக நடிகை சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனை டுவிட்டர் மூலம் அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், `காதலில் விழுந்தேன்’ படத்திற்கு இசையமைத்த விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேருவதில் மகிழ்ச்சி என்றும் சுனைனா தெரிவித்துள்ளார்.