full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆண்ட்ரியா பாட.. சன்னி லியோன் ஆட..

பாலிவுட் படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்குபவர் நடிகை சன்னி லியோன். இப்போதெல்லாம் இந்தியாவில்                                                                        எந்த பகுதிக்கு சென்றாலும்,        மற்ற நடிகைகளை பார்க்கக்கூடும் ரசிகர்களை விட அதிக கூட்டம் சன்னி லியோனுக்கு கூட தொடங்கிவிட்டது.                                                            சமீபத்தில் கூட கேரளா சென்ற போது இவரைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கொச்சியே ஸ்தம்பித்தது.

சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த “வடகறி” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார். இந்நிலையில் அடுத்ததாக சென்னைக்கு வர இருக்கிறார்.

வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக்கிறார்.          பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கிறார்.

சன்னி லியோன் வந்து போனாலே கூட்டம் அள்ளும், நடனமாடப் போகிறார் என்றால் கேட்கவா வேண்டும். தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.