கனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை விரும்புவதில்லை.
பெண்கள் அமைப்பினரும் சில கவர்ச்சி நடிகைகளும் சன்னிலியோனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறார்கள். பெங்களூருவில் நடன நிகழ்ச்சியொன்றுக்கு வரவிடாமலும் விரட்டினார்கள். செக்ஸ் நடிகை இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் சன்னிலியோன். தமிழில் அவர் நடிக்கும் வீரமாதேவி சரித்திர படம் அதற்கு உதவும் என்று நம்பி இருக்கிறார்.
சன்னிலியோன் வாழ்க்கை அவரது ஒப்புதலோடு ஆவணப்படமாக தயாராகி உள்ளது. சிறுவயது சம்பவங்கள், செக்ஸ் நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களையும் அதில் பதிவு செய்துள்ளனர். இந்த படம் சன்னிலியோனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுதார். “ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது. 1000 முறைக்கு மேல் கதறி அழுதேன். நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்” என்று படத்தை பற்றிய உணர்வுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.