சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ள சூரரை போற்று படம் கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வருவதில் தாமதமாகி உள்ளது. தற்போது புதிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகி வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் சூரரை போற்று படத்தை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.
இந்தநிலையில் தற்போது சூரரை போற்று படத்தின் தணிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளன. படம் 153 நிமிடங்கள் ஓடுகிறது என்பதையும் படத்தில் இருந்து தணிக்கை குழுவின் ஆட்சேபத்தினால் நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சி மாற்றங்கள் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பலரும் சூரரை போற்று படம் இணையதளத்தில் வெளியாகிறதா? என்று கேள்வி எழுப்பினார்கள். படம் ஒ.டி.டியில் வெளியாகப்போகிறது என்ற தகவலும் இணையதளத்தில் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ‘சூரரை போற்று’ படத்தை ஓ.டி.டியில் வெளியிடும் திட்டம் இல்லை. தியேட்டரில் தான் ரிலீசாகும். கொரோனா ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றனர்.