full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக்

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது ‘தி சேஸ்’

கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவினருடன் ‘தி சேஸ்’ உருவாகியுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘தி சேஸ்’ பணிகளை முடித்துவிட்டு, ‘சூர்ப்பனகை’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘தி சேஸ்’ கதைகளத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ஒரே இரவில் நடக்கும் கதையும் கூட.

படம் பார்ப்பவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கார்த்திக் ராஜு. நல்ல காமெடி, சண்டைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என பார்வையாளர்களை இந்தப் படம் கட்டிப் போட்டுவிடும் என்று உறுதியாக நம்பலாம்.