பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை ஆன்லைன் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர்.
இதில், ஒட்டுமொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்.
பொருளாதாரத்தில் இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என 26 சதவீதம் பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும், 42 சதவீதம் பேர், சில பாதிப்புக்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதிக வெளிப்படைத் தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என 23 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது குறுகிய கால பாதிப்பே என 45 சதவீதம் பேரும், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இன்னொரு கேள்விக்கு, 77 சதவீதம் பேர் பண மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.